Posts

Showing posts from June, 2009

சீனாவின் Operation முத்து மாலை

Image
தினம் தினம் பத்திரிக்கையை விரித்தால், பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் ஊடுவல், அச்சுறுத்தல், என்று கொட்டை எழுத்துகளில் நெஞ்சை பதைக்க செய்யும் செய்திகள் சரளமாக கிடைக்கும் இந்த நேரத்தில், ஒயிலாக நம் தலைக்கு மேலேயே உட்கார்ந்து கொண்டு காய் நகர்த்தி கொண்டிருக்கும் சீனாவை பற்றிய இந்த துகிரிலிரியும் பதிவை காண நேர்ந்தது. அவற்றில் இருந்து சில கருத்துகள்: “ வளைகுடா நாடுகளில் இருந்து பெருமளவில் எண்ணெயைக் கப்பல் மூலம் கொண்டுசெல்கிறது. இந்தக் கப்பல்களின் பாதுகாப்புக்கு எனக் கூறிக்கொண்டு பாகிஸ்-தானில் கவுடார், வங்கதேசத்தில் சிட்டகாங், மியான்மரில் சிட்வி, இலங்கையில் ஹம்பன்தோடா ஆகிய இடங்களில் துறைமுகங்களை அமைத்துள்ளது சீனா. இந்தத் திட்டத்துக்கு சீனா வைத்துள்ள பெயர், 'முத்து மாலை'. முத்துக்களைக் கோத்தால் முத்துமாலை கிடைப்பது போன்று, இந்தத் துறைமுகங்களை இணைப்பதுதான் சீனாவின் பகீர் பாதுகாப்புத் திட்டம். கண்ணை மூடிக்கொண்டு யோசித்தால், இந்தியாவைச் சுற்றி பாகிஸ்தான், இலங்கை, மியான்மர் ஆகிய நாடுகளில் சீனாவின் இரும்பு வளையம் அமைக்கப்பட்டு-விட் டது. ஒருவிதமான சுழலில் சிக்கி இருக்கிறது இந்தியா.